செவ்வாய், 22 மார்ச், 2011

ஹும்ம்..அதெல்லாம் ஒரு காலம்!!!!!!!

கிராமத்துல 10 ஏக்கர் நஞ்சை...10  ஏக்கர் புஞ்சை...தென்னந்தோப்பு, பம்புசெட்டுன்னு இருந்ததெல்லாம் ஒரு காலம். அது மட்டும் இப்ப இருந்திருந்தா..கால நீட்டிகிட்டு உட்கார்ந்து சாப்பிடலாம். இப்படிதான் நம்மில் அநேகர் நினைக்கிறோம்.

உண்மையில் பார்க்கப்போனால்  உங்களிடம் இருந்தது எல்லாமே முந்தைய தலைமுறையின் உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் வந்தது. அப்படி வந்த பொருட்கள் இல்லாமல் போனதால் நம்மிடம் இருந்த நம்பிக்கையையும், மன உறுதியையும் தொலைத்து விட்டோம்.இன்னொரு கோணத்தில் பார்த்தால் "காலாட்டிக் கொண்டே சாப்பிடலாம்"என்ற எண்ணத்தில் அடி விழுந்ததால் ஏற்பட்ட எரிச்சல் அது.

கார்ன் லூயி....ஒரு பெரிய மனவியல் ஆராய்ச்சிக்குப் பிறகு ஒன்று சொல்கிறார். இவர்கள் எல்லாம் தங்கள் சோம்பேறித்தனத்தை மறைக்கவும், உழைத்து ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாததாலும்தங்களை தாங்களே இப்படி ஏமாற்றிக் கொள்கிறார்கள் என்கிறார்.

ஓய்வுக்கு பிறகு நிறையப் பேர் நான் எப்படி இருந்தேன் தெரியுமா என்று புலம்புவதற்கு காரணம்...அவர்களுக்கு இழந்ததின் மீது இருக்கிற ஈர்ப்புதான்.

அதனாலேயே ஓய்வுக்கு பிறகு பெற வேண்டிய உயரிய இடங்களையும் அவர்கள் கவனிக்கத் தவறி விடுகிறார்கள்.
அமெரிக்காவில் கர்னல்-சாண்டர்ஸ் என்கிற 65  வயதுத் தாத்தா ஓய்வு பெற்ற பிறகு தன்னிடமிருந்த  அம்மா உருவாக்கிய ரெசிபியை வைத்து தனது ஓய்வூதியப் பணத்தை கொண்டு சின்னதாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். இன்று உலகம் முழுவதும் அவரது நிறுவனம் கொடி கட்டிப் பறக்கிறது. ஒரு மீசைக்கார தாத்தா படம் போட்ட KFC  கடைகளை பார்த்து இருப்பீர்கள்.அது இன்று உலகம் முழுவதும் பிரசித்தம்.

65  வயதுக்குப் பிறகு உலகம் அறியும் படி தன்னை உயர்த்திக் கொண்டது கர்னல்-சாண்டர்சின் சாதனை. அதற்கு காரணம் கண் முன்னே இருந்த வாய்ப்புகளை அவர் கவனித்தார்.

மூடிவிட்ட கதவுகளைப் பற்றி அவர் கவலைப் படவில்லை.

எனவே அமோகமாக வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி பேசிக்கொண்டே இருக்காமல்..நடைமுறைக்கு வருவோம்.
சில விஷயங்களை விட்டால் தான் பல விஷயங்களைப் பெற முடியும். உங்களுக்கு குரங்கை எப்படிப் பிடிப்பார்கள் என்று தெரிந்து இருக்கலாம். ஒரு கையை கஷ்டப்பட்டு நுழைக்கிற  அளவுக்கு சிறிய வாய் கொண்ட கனமான பானைக்குள், குரங்குக்குப் பிடித்த பதார்த்தங்களைப் போட்டு விடுவார்கள்.

குரங்கு அந்த வாசனையை வைத்து அங்கு வரும். பெண்கள் வளையல் மாட்டுகிற ஸ்டைலில் கைகளை நேராக வைத்துக் கொண்டு  உள்ளே விடும். உள்ளே கிடைக்கிற பண்டங்களை எடுத்துக் கொண்டு கைகளை மூடும். இப்போது கை வெளியே வராது.

நீங்களும் அதைப் போல் கைகளை மூடிக்  கொண்டு பழம் பெருமை பேசி போராடாதீர்கள். உதறிவிட்டு வாருங்கள், உலகமே உங்களுக்காக காத்திருக்கிறது. அது உங்களின்  பழைய பிம்பங்களை  விட மேலானது...உயர்வானது.

ஞாயிறு, 20 மார்ச், 2011

எனக்குப் பிடித்த பாடல் வரிகள்....
ஒரு கல், ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக் கொண்டால் காதல்
ஒரு சொல், சில மௌனங்கள் பேசாமல் பேசிக்கொண்டால் காதல்

வானம் எனக்கொரு போதி மரம், நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும், திருநாள் நிகழும் சேதி வரும்

முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தவறியதோ
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ...


வரும் வழியில் பனிமழையில் பருவ நிலா தினம் நனையும்
முகில் எடுத்து, முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும்....

தங்கத்தை பூட்டி வைத்தாய், , வைரத்தை பூட்டி வைத்தாய்
உயிரை பூட்ட ஏது பூட்டு?

பாயும் புலியின் குணங்களை மட்டும் பார்வையில் வைத்தானே
பாழும் மனிதன் குணத்தை மட்டும் போர்வையில் மறைத்தானே

காதல் கடிதம் எழுதவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டு வா, பேனா மையோ தீர்ந்திடும்...

உன் விழியால் பிறர் அழுதால் கண்ணீரும் ஆனந்தம்  ஆனந்தம்...

தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி தாமரை பூ மீது விழுந்தனவோ
இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில் படைத்திட்ட பாகம் தான் உன் கண்களோ...

சித்திரை மாதம் மழையைத் தேடி வாடுகின்றாய்
மார்கழி மாதம் வெயிலைத் தேடி ஓடுகின்றாய்
உதயத்தைக் காண மேற்கு நோக்கி ஒவ்வொரு நாளும்  ஏங்குகிறாய்

உயிரிலே எனது உயிரிலே ஒரு துளி தீயை உதறினாய்
உணர்விலே எனது உணர்விலே அணுவென உடைந்து சிதறினாய்...
உச்சரித்து நீயும் விலக  தத்தளித்து நானும் மருகஎன்ன செய்வேனோ... 

உப்புகல்லு கண்ணீருக்கு ஏக்கப்பட்டது  
கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது
ஒத்த சொல்லு புத்திக்குள்ள மாட்டிகிட்டது நீ 
தப்பிசெல்ல  கூடாதுன்னு கேட்டுகிட்டது......
  கத்தியின்றி, ரத்தமின்றி காயப்பட்டவள்
உன் கண்கள் செய்த வைத்தியத்தால் நன்மை அடைகிறேன்
மிச்சமின்றி, மீதமின்றி சேதப்பட்டவள், உன் நிழல் கொடுத்த தைரியத்தால் என்னை அறிகிறேன்....

வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்...

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
நமது கதையை காலமும் சொல்லும்
உதிர்ந்து போன மலரின் வாசமா ......
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள் உந்தன் கையில்
தோளில் சாய்ந்து கதைகள் பேச நமது விதியில் இல்லை
முதல் கனவு போதுமே காதலா...

சுகமே நினைத்து சுயம்வரம் தேடி
சுழல் மேல் தவிக்கும் துயரங்கள் கோடி...

மயிலே உன்னை நான் மயக்கவும் இல்லை
மனதால் என்றும்  வெறுக்கவும் இல்லை
எனை நீ தேடி இணைந்தது பாவம்
எல்லாம் நீயே எழுதிய கோலம்


அருகம்புல் ஆகிறேன் இப்பொழுது
அதை ஆடுதான் மேய்வது எப்பொழுது
திருவிழா ஆகிறேன் இப்பொழுது
நீ எனக்குள் தொலைவது எப்பொழுது....

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
......தேனில் வண்டு மூழ்கும் போது 
பாவம் என்று வந்தாள் மாது

கூந்தல் வண்ணம் மேகம் போல குளிர்ந்து நின்றது
கொஞ்சுகின்ற செவிகள் ரெண்டும் கேள்வியானது
மூங்கிலே தோள்களோ..தேன்குழல் விரல்களோ
ஒரு அங்கம் கைகள் அறியாதது......

முகத்தை தாமரையாய் நினைத்து மொய்த்த வண்டு ஏமாந்த கதைதான் கண்கள்
பாவை புருவத்தை வளைப்பது புது விதம்
அதில் பரதமும் படிக்குது அபிநயம்
பொன்னுருகும் கன்னம் குழிய ஒரு புன்முறுவல் சிந்தி சென்றாள்
பாண்டியப் பேரரசு பார்த்து வியந்ததொரு முத்துச் சரங்கள் இதழோரம்
பாவை இதழது சிவப்பெனும்  போது பாவம் பவளமும் ஜொலிப்பது எது??






வெள்ளி, 18 மார்ச், 2011

அம்மாபட்டில இருந்துவேலைக்கு வர்ற அருக்காணிகளின் கவனத்துக்கு!!!!!

ஏதோ ஒரு பட்டி, தொட்டில பிறந்து திறமையா படிச்சுட்டு, நம்ம பட்டணத்துக்கு வேலைக்கு வர தயங்குபவரா நீங்கள்?   தாழ்வு மனப்பான்மைய தூக்கி எறிஞ்சுட்டு கால் சென்டர் கலாச்சாரத்துல கலக்க தயாராகுங்க...
முதல்ல பவுடரால  ஒயிட் வாஷ் பண்ணின மூஞ்சி, விரிச்சுப் போட்ட   முடி, நாய் குதறின மாதிரி ஒரு ஜீன்ஸ், டீஷர்ட், செல்போன், ஐ பாட்  னு பந்தாவா திரியணும்.
எஸ்..நோ..ச்சோ ச்வீட்...ச்சோ cute  னு நாலஞ்சு இங்கிலீஷ் வார்த்தை தெரிஞ்சு வச்சுக்கணும்.
அப்பாயின்ட்மென்ட் ஆர்டரோட ஐயனாரைக் கும்பிட்டுட்டு, எட்டாவது படிக்கும் போது வாங்கின ஸ்கூல் பேக்கையே, ஹான்ட்  பேக்கா தூக்கிகிட்டு, இருக்கறதுல சூப்பரான சுடிதார்ல ஒன்னை  போட்டுக்கிட்டு நீங்க முதல் நாள் ஆபீசுக்கு போனா......
"ஆயா வேலைக்கெல்லாம்  நேத்தே ஆள் எடுத்தாச்சேனு !" செக்யூரிட்டி சொல்லுவான்! ஊருக்குள்ள சுப்ரமணியபுரம் ஹீரோயின் மாதிரி திரிஞ்ச புள்ள இத தாங்குமா? அன்னியில இருந்து  நீங்களும் ஜீன்ஸ்க்கு மாறிடுவீங்க.
ஆனா போடுற வேஷத்த கச்சிதமா போடணும்.
'ஏய் புள்ள...வேப்ப மாற மச்சு வீட்டு பொண்ணு மல்லிகாதானே நீயின்னு? ஊர்க்காரங்க யாராவது அடயாளம் கண்டுக்கற மாதிரி இருக்க கூடாது. கமலஹாசன் மாதிரி கெட்டப் difference  காட்டணும்.
'ஐ! செலக்ட்....ப்ராஜெக்ட்..அசோசியேட்....  னு' முதல் நாளே நீங்க அடிக்கற பீட்டர்ல receptionist  மிரளணும். அதான் உங்களுக்கு வேணும்... அப்ப ஆரம்பிக்கற பிதாமகன் விக்ரம் ஸ்டைல், மானரிசத்தை கடைசி வரைக்கும் மெயின்டெயின்   பண்ணனும்!. 
இங்க ஆபீஸ்ல    எப்படி ஊரை மறைக்கிரோமோ, அதே போல ஊருக்குள்ளயும் ஆபீஸ் அட்ரஸ், போன் நம்பர்  இதெல்லாம் கொடுக்கப்படாது!  அப்புறம், 'எம்புள்ள அருக்காணி அங்கனதேன் வேல பாக்குது...சித்த அவள கூப்பிடுத்தா னு  நம்ம அப்பத்தா என்னிக்காவது போன் பண்ணிட்டா ,நம்மளோட அத்தனை  இமேஜும் டேமேஜ் !

ஞாயிறு, 6 மார்ச், 2011

விளம்பர மோகம்!!!!!!

விளம்பரங்கள் பொதுவாக கண்ணைக் கவர்வதாக இருக்க வேண்டுமே ஒழிய கண்ணை உறுத்துவதாக இருக்க கூடாது. எப்போதுமே அரசியல்வாதிகள் தான் தங்கள் சுய லாபத்துக்காக விளம்பரம் செய்து கொள்வார்கள். வழி நெடுக மின்விளக்குகள், பத்தடிக்கு ஒரு போஸ்டர் என்று அதைப் பார்த்தாலே நமக்கு எரிச்சல் வரும். என்ன பெரிய சாதனை பண்ணி விட்டார்கள் என்றே நினைக்கத் தோன்றம். அவர்களைப் பார்த்து இப்போது அனைவரும் விளம்பர மோகத்தில் சிக்கித் தவிக்கிறார்கள். திருமணம் என்றாலும் சரி, சாவு என்றாலும் சரி, உடனே ஒரு நூறு பேரின் படங்களைப் போட்டு தெருவில் பெரிய பேனர்  வைத்து விடுவார்கள். எதற்கு இந்த வீண் ஜம்பம் ?.....     .எனக்குத் தெரிந்து உலகிலேயே தமிழர்கள் தாம் இத்தகைய விளம்பர மோகத்தில் சிக்கித் தவிப்பவர்கள்.
இப்போது சமீப காலங்களில் கூட திரைத்துறையினர்  தங்களது சுமாரான படங்களைக் கூட ஆஹா, ஓஹோவென்று புகழ்ந்து விளம்பரம் தருகிறார்கள். அது தேவையே இல்லை. நல்ல கதையம்சத்துடன் தரமான படம் எடுத்தாலே மக்கள் பார்க்கத்தான் செய்வார்கள்.
அதே போல அநேகர் தங்கள் வீடு திருமணங்களைக் கூட ஆடம்பரமாக, விளம்பரபடுத்தி செய்வார்கள். பெண் வயதுக்கு வந்தாலும் கூட ஒரு விளம்பரம்..இது எவ்வளவு தவறான செயல்? வயதுக்கு வருவதும், ஆண் பெண்  இருவர் வாழ்க்கையில் இணைவதும் ஒரு சாதாரண நிகழ்வுதானே?அதற்கும் கூட விளமபரமா? ஏன் இந்த நிலை?.....இனிமேலாவது இந்த பாழாய்ப்  போன அரசியல்வாதிகள் அடிக்கும்  சுய தம்பட்டத்தை நாமும் பின்பற்ற வேண்டாமே??? 

வியாழன், 3 மார்ச், 2011

மனிதநேயப் பண்பாடு....

பொதுவாகவே பெரும்பாலான தொலைக்காட்சிகளிலும், மாத இதழ்களிலும் பெண்களுக்கான பகுதி என்றாலே கோலம், அழகுக்குறிப்பு, சமையல் என்றுதான் காட்டுகிறார்கள். ஏன் இந்த பாகுபாடு?  அறிவு சார்ந்த விஷயங்கள் பெண்களுக்கானது அல்ல என்று நினைக்கிறார்களா?
அதிலும் சில சம்பிரதாயங்கள் வேறு இருக்கின்றன. ஒரு பெண் நன்றாக கோலம் போட்டால் அவளுக்கு நல்ல கணவன் அமைவான் என்றும், தண்ணீர் அதிகம் செலவழித்தால் அவள் செலவாளி  என்றும் பல மூட நம்பிக்கைகள் உள்ளன. இவை எல்லாம் எதை வலியுறுத்துகின்றன?
                          கோலம் போடுதல் என்பது ஒரு பயிற்சி..அது ஒரு அழகு..அவ்வளவே. அதைவிட்டு விட்டு நன்றாக கோலம் போட்டால் தான் அவளுக்கு நல்ல கணவன் அமைவான் என்பதும், நல்ல கணவன் அமைவதே அவள் பிறந்த பிறவியின் பலன் என்றும் மூளைக்குள் திணிக்கப்பார்ப்பது பெண்ணடிமைத்தனம் அன்றி வேறு என்ன?
                                     இது மனிதநேயப் பண்பாடு அல்ல. முதலில் அவள் ஒரு மனுஷி.அப்புறம் தான் பண்பாடு, கலாசாரம் எல்லாமே.
நல்ல கணவன் அமையாவிட்டால் அவனை தூக்கி ஏறி...இன்னொருவனை மணமுடித்துக் கொள் அதுதான் மனிதநேய செயல்..இது பலருக்கு சற்று அதிர்ச்சியாக இருக்கலாம்.ஆனால் அதுதான்  உண்மையான ஜனநாயகப் பண்பாடு.  நாகரிகம் என்பது நம் சிந்தனைகள் முற்போக்கு சிந்தனையாக இருக்க வேண்டும். வெறுமனே ,நடை உடை பாவனைகளில்  மாற்றம் ஏற்படுத்துவது அல்ல நாகரிகம்!!!!!!