வெள்ளி, 18 மார்ச், 2011

அம்மாபட்டில இருந்துவேலைக்கு வர்ற அருக்காணிகளின் கவனத்துக்கு!!!!!

ஏதோ ஒரு பட்டி, தொட்டில பிறந்து திறமையா படிச்சுட்டு, நம்ம பட்டணத்துக்கு வேலைக்கு வர தயங்குபவரா நீங்கள்?   தாழ்வு மனப்பான்மைய தூக்கி எறிஞ்சுட்டு கால் சென்டர் கலாச்சாரத்துல கலக்க தயாராகுங்க...
முதல்ல பவுடரால  ஒயிட் வாஷ் பண்ணின மூஞ்சி, விரிச்சுப் போட்ட   முடி, நாய் குதறின மாதிரி ஒரு ஜீன்ஸ், டீஷர்ட், செல்போன், ஐ பாட்  னு பந்தாவா திரியணும்.
எஸ்..நோ..ச்சோ ச்வீட்...ச்சோ cute  னு நாலஞ்சு இங்கிலீஷ் வார்த்தை தெரிஞ்சு வச்சுக்கணும்.
அப்பாயின்ட்மென்ட் ஆர்டரோட ஐயனாரைக் கும்பிட்டுட்டு, எட்டாவது படிக்கும் போது வாங்கின ஸ்கூல் பேக்கையே, ஹான்ட்  பேக்கா தூக்கிகிட்டு, இருக்கறதுல சூப்பரான சுடிதார்ல ஒன்னை  போட்டுக்கிட்டு நீங்க முதல் நாள் ஆபீசுக்கு போனா......
"ஆயா வேலைக்கெல்லாம்  நேத்தே ஆள் எடுத்தாச்சேனு !" செக்யூரிட்டி சொல்லுவான்! ஊருக்குள்ள சுப்ரமணியபுரம் ஹீரோயின் மாதிரி திரிஞ்ச புள்ள இத தாங்குமா? அன்னியில இருந்து  நீங்களும் ஜீன்ஸ்க்கு மாறிடுவீங்க.
ஆனா போடுற வேஷத்த கச்சிதமா போடணும்.
'ஏய் புள்ள...வேப்ப மாற மச்சு வீட்டு பொண்ணு மல்லிகாதானே நீயின்னு? ஊர்க்காரங்க யாராவது அடயாளம் கண்டுக்கற மாதிரி இருக்க கூடாது. கமலஹாசன் மாதிரி கெட்டப் difference  காட்டணும்.
'ஐ! செலக்ட்....ப்ராஜெக்ட்..அசோசியேட்....  னு' முதல் நாளே நீங்க அடிக்கற பீட்டர்ல receptionist  மிரளணும். அதான் உங்களுக்கு வேணும்... அப்ப ஆரம்பிக்கற பிதாமகன் விக்ரம் ஸ்டைல், மானரிசத்தை கடைசி வரைக்கும் மெயின்டெயின்   பண்ணனும்!. 
இங்க ஆபீஸ்ல    எப்படி ஊரை மறைக்கிரோமோ, அதே போல ஊருக்குள்ளயும் ஆபீஸ் அட்ரஸ், போன் நம்பர்  இதெல்லாம் கொடுக்கப்படாது!  அப்புறம், 'எம்புள்ள அருக்காணி அங்கனதேன் வேல பாக்குது...சித்த அவள கூப்பிடுத்தா னு  நம்ம அப்பத்தா என்னிக்காவது போன் பண்ணிட்டா ,நம்மளோட அத்தனை  இமேஜும் டேமேஜ் !

1 கருத்து:

  1. இல்லை அருக்காணிக‌ள் கால‌ம் என‌ப்து கொஞ்ச‌ம் ம‌ழை ஏறிவிட்ட‌து,

    கிராம‌ப்புற‌ங்க‌ளில் இருந்து வ‌ருகிற‌வ‌ர்க‌ள் ஒழுங்காக‌ வேலை செய்து கொண்டிருக்க‌, ப‌ட்டின‌த்திலேயே பிற‌ந்து ப‌டித்து வ‌ருகிற‌வ‌ர்க‌ள் முழுக்க‌ அலுவ‌ல‌க‌த்தில் அரசிய‌ல் செய்து கொண்டிருக்கிறார்க‌ள்

    please remove word verification

    பதிலளிநீக்கு