ஞாயிறு, 6 மார்ச், 2011

விளம்பர மோகம்!!!!!!

விளம்பரங்கள் பொதுவாக கண்ணைக் கவர்வதாக இருக்க வேண்டுமே ஒழிய கண்ணை உறுத்துவதாக இருக்க கூடாது. எப்போதுமே அரசியல்வாதிகள் தான் தங்கள் சுய லாபத்துக்காக விளம்பரம் செய்து கொள்வார்கள். வழி நெடுக மின்விளக்குகள், பத்தடிக்கு ஒரு போஸ்டர் என்று அதைப் பார்த்தாலே நமக்கு எரிச்சல் வரும். என்ன பெரிய சாதனை பண்ணி விட்டார்கள் என்றே நினைக்கத் தோன்றம். அவர்களைப் பார்த்து இப்போது அனைவரும் விளம்பர மோகத்தில் சிக்கித் தவிக்கிறார்கள். திருமணம் என்றாலும் சரி, சாவு என்றாலும் சரி, உடனே ஒரு நூறு பேரின் படங்களைப் போட்டு தெருவில் பெரிய பேனர்  வைத்து விடுவார்கள். எதற்கு இந்த வீண் ஜம்பம் ?.....     .எனக்குத் தெரிந்து உலகிலேயே தமிழர்கள் தாம் இத்தகைய விளம்பர மோகத்தில் சிக்கித் தவிப்பவர்கள்.
இப்போது சமீப காலங்களில் கூட திரைத்துறையினர்  தங்களது சுமாரான படங்களைக் கூட ஆஹா, ஓஹோவென்று புகழ்ந்து விளம்பரம் தருகிறார்கள். அது தேவையே இல்லை. நல்ல கதையம்சத்துடன் தரமான படம் எடுத்தாலே மக்கள் பார்க்கத்தான் செய்வார்கள்.
அதே போல அநேகர் தங்கள் வீடு திருமணங்களைக் கூட ஆடம்பரமாக, விளம்பரபடுத்தி செய்வார்கள். பெண் வயதுக்கு வந்தாலும் கூட ஒரு விளம்பரம்..இது எவ்வளவு தவறான செயல்? வயதுக்கு வருவதும், ஆண் பெண்  இருவர் வாழ்க்கையில் இணைவதும் ஒரு சாதாரண நிகழ்வுதானே?அதற்கும் கூட விளமபரமா? ஏன் இந்த நிலை?.....இனிமேலாவது இந்த பாழாய்ப்  போன அரசியல்வாதிகள் அடிக்கும்  சுய தம்பட்டத்தை நாமும் பின்பற்ற வேண்டாமே??? 

2 கருத்துகள்:

  1. நிச்சயமாக ஓவ்வொருவரும் உணர வேண்டிய கருத்து

    பதிலளிநீக்கு
  2. நல்லா சொன்னீங்க டீச்சர், ஆசிரியம் என்பது கற்றுக்கொடுக்கும் இடங்களில் மட்டுமல்ல, சமுதாயதிற்க்கும்தான் என்ற உங்கள் கடமை உணர்வை மதிக்கிறேன்.

    பதிலளிநீக்கு