வியாழன், 3 மார்ச், 2011

மனிதநேயப் பண்பாடு....

பொதுவாகவே பெரும்பாலான தொலைக்காட்சிகளிலும், மாத இதழ்களிலும் பெண்களுக்கான பகுதி என்றாலே கோலம், அழகுக்குறிப்பு, சமையல் என்றுதான் காட்டுகிறார்கள். ஏன் இந்த பாகுபாடு?  அறிவு சார்ந்த விஷயங்கள் பெண்களுக்கானது அல்ல என்று நினைக்கிறார்களா?
அதிலும் சில சம்பிரதாயங்கள் வேறு இருக்கின்றன. ஒரு பெண் நன்றாக கோலம் போட்டால் அவளுக்கு நல்ல கணவன் அமைவான் என்றும், தண்ணீர் அதிகம் செலவழித்தால் அவள் செலவாளி  என்றும் பல மூட நம்பிக்கைகள் உள்ளன. இவை எல்லாம் எதை வலியுறுத்துகின்றன?
                          கோலம் போடுதல் என்பது ஒரு பயிற்சி..அது ஒரு அழகு..அவ்வளவே. அதைவிட்டு விட்டு நன்றாக கோலம் போட்டால் தான் அவளுக்கு நல்ல கணவன் அமைவான் என்பதும், நல்ல கணவன் அமைவதே அவள் பிறந்த பிறவியின் பலன் என்றும் மூளைக்குள் திணிக்கப்பார்ப்பது பெண்ணடிமைத்தனம் அன்றி வேறு என்ன?
                                     இது மனிதநேயப் பண்பாடு அல்ல. முதலில் அவள் ஒரு மனுஷி.அப்புறம் தான் பண்பாடு, கலாசாரம் எல்லாமே.
நல்ல கணவன் அமையாவிட்டால் அவனை தூக்கி ஏறி...இன்னொருவனை மணமுடித்துக் கொள் அதுதான் மனிதநேய செயல்..இது பலருக்கு சற்று அதிர்ச்சியாக இருக்கலாம்.ஆனால் அதுதான்  உண்மையான ஜனநாயகப் பண்பாடு.  நாகரிகம் என்பது நம் சிந்தனைகள் முற்போக்கு சிந்தனையாக இருக்க வேண்டும். வெறுமனே ,நடை உடை பாவனைகளில்  மாற்றம் ஏற்படுத்துவது அல்ல நாகரிகம்!!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக