இன்றைய உலகில் குறைந்த நேரம்,அதிக வேலை,போட்டிகளுக்கிடையே ஜெயிக்கும் சவால் என்று நம் வாழ்க்கை முறை அவசரமும் டென்சனும் நிறைந்ததாக மாறிப் போய்விட்டது!...
நாம் அமைதியாக வாழ நினைத்தால் கூட நம்மைக் சுற்றி இருக்கும் சூழல், அப்படியே தனதாக்கிக் கொண்டு அதன் டென்சன் களை நமக்கும் உள் செலுத்துகின்றது.
இதிலிருந்து ரிலாக்ஸ் செய்யத்தான் நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி தேடி நகைச்சுவை சீன்களை விரும்பி பார்க்கிறோம்.ஆனால் தேவை இருக்கும் அளவுக்கு நமக்கு பார்ப்பதற்கோ ,படிப்பதற்கோ நிறைய நகைச்சுவை விஷயங்கள் இல்லை என்பதுதான் நிஜம்.
வேலைகளை முடித்து விட்டு சற்றே ரிலாக்ஸ் ஆக காமெடி சீன்களை போட்டுப் பார்த்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.திரும்ப,திரும்ப அதே காமெடி சீன்கள்!..
தேவை ஏற்பட்ட அளவுக்கு சரக்கோ,அதைப் படிப்பவர்களோ இல்லாததுதான்!அதிலும் பெண்கள் என்றால் இன்னும் குறைவு!
எனவே அழுகை சீரியல்கள் எடுக்கும் தொலைக்காட்சி தொடர்இயக்குனர்கள், தங்கள் கவனத்தை நகைச்சுவைத் தொடர்களுக்கு திருப்பினால் ௯௦% மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்!...
"நகைச்சுவையாக நாம்சிந்தித்து, எல்லா விஷயங்களையும் லைட்டாக எடுத்துக் கொண்டால், அது நம் வாழ்க்கைப் பாதையையே கூட மாற்றக் கூடும்."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக