வியாழன், 16 செப்டம்பர், 2010

தேசத்தையே திரும்பி பார்க்க வைத்த தீர்ப்பு!!!!

"இல்லத்தரசிகளின் பணிகளை பணத்தால் மதிப்பிட முடியாது.வீடு வேலைகள் குழந்தைகளின் படிப்பு,கணவரின் ஆரோக்கியம்,என்று அவர்கள் பணத்துக்காக இந்த அன்பையும்,உழைப்பையும் கொடுக்கவில்லை.கொடையாக(gruduity) வழங்குகிறார்கள்.எனவே அவர்கள் பங்களிப்பை அங்கீகரிப்பதற்கான வாய்ப்பாக இல்லத்தரசிகளுக்கும்  இனி சம்பளம் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம்   வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்துள்ளது .இல்லத்தரசிகளை வருவாய் இல்லாதவர் பட்டியலில் வைத்திருப்பது அதிர்ச்சிகரமானது.
2001 இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இல்லத்தரசிகளை பிச்சை எடுப்பவர்கள்,விபச்சாரிகள் போன்றவர்கள் சேர்க்கப்பட்டுள்ள பட்டியலில் சேர்த்துள்ளனர்.இது பெண்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.வேலைக்குச் செல்லும் கணவனின் வருமானத்தில் பாதியை,வீட்டையும்,குழந்தைகளையும் கவனிக்கும் அவருடைய மனைவியின் பணிகளுக்கான சம்பளமாக மதிப்பிட வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அதிலும்  கிராமப்புற பெண்கள் தண்ணீர் எடுப்பது,விறகு சேகரிப்பது,சாண  எரு  தயாரித்து சமையலுக்கு பயன்படுத்துவது,தேவையான காய்கறிகளை தோட்டத்தில் வளர்ப்பது என எக்கச்சக்க வேலைகள் செய்கின்றனர்.இதெல்லாம் பொருளாதார சேமிப்புதானே?
எனவே இல்லத்தரசிகளே "வேலைக்கு எல்லாம் போகல.வீட்டுல சும்மாதான் இருக்கேன்  "என்ற தாழ்வு மனப்பான்மை இனி வேண்டாம்.உங்கள் உழைப்புக்கு,அக்கறைக்கு,அன்புக்கு,தியாகத்துக்கு காலம் பல கடந்து மரியாதை கிடைத்து இருக்கிறது இந்த தீர்ப்பின் மூலம்!!!!!
 

1 கருத்து:

  1. கடலில்,காவிரியில்
    மூழ்கி நீராடி
    கரையோரம் அமர்ந்து
    அந்தணரோடு வேதம் சொல்லி...

    முப்பாட்டன்,பாட்டன்
    தந்தைக்கும்
    திதியோடு,தானதர்மம்
    சிரத்தையோடு செய்து முடித்து....

    தலைவாழை இலையில்
    அறுசுவையோடு
    வடை,பாயசம்
    அத்தனையும் பரிமாறி...

    படையலிட்டு விரதம் முடித்து
    குடும்பமே காகம்
    அழைத்தது
    விருந்துண்ண!!!

    அடுப்படி காத்து
    அத்தனையும் சமைத்த
    அம்மா...உன் கொள்ளுப்பாடிக்கும்,பாட்டிக்கும்
    நாளை உனக்கும்
    உண்டா அமாவாசை திதி?!!-மங்கை.

    பதிலளிநீக்கு